இந்தியா

ஸ்மிருதி இரானி உதவியாளர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

DIN

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உதவியாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் வெள்ளிக்ழமை இரவு கைது செய்யப்பட்டார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். 

இந்நிலையில், ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திர சிங், 25-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ராமச்சந்திரா, தர்மாநாத், நசீம், கோலு உள்ளிட்ட 5 பேரை 27-ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான வாசிம், உத்தரப்பிரதேசத்தின் ஷல்ஹபூர் எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT