இந்தியா

மக்களவையில் மத்திய கல்வி மசோதா தாக்கல்

DIN


புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடியாக 7,000 ஆசிரியர்களை நியமிக்க வகை செய்யும் மத்திய கல்வி மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ஐந்தாண்டு கால  ஆட்சியின் போது இதேபோன்றதொரு அப்போதைய மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், அதன்பிறகு அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதனால், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இந்த நிலையில், அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, புதிய மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் பணிநிலை இடஒதுக்கீடு) மசோதா, 2019-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அந்தந்த அமைப்புகளே புதிய இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியான முறையில் நிரப்பிக் கொள்வதற்கு வழிவகை செய்கிறது. 
மசோதா தாக்கலானதையடுத்து உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது காலியாக உள்ள 7,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக பணியமர்த்தும் நடவடிக்கை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT