இந்தியா

கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

DIN


கடந்த 2014 மக்களவைத் தேர்தலைவிட, இந்த முறை அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: 
2014 மக்களவைத் தேர்தல் மோடிக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடந்த போட்டியாக இருந்தது. 2019, தேர்தல் மோடிக்கும் யாருக்கும் இடையிலான தேர்தல்? 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்டன.  ஆனால்,  தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்பதைக் கூட எதிர்க்கட்சிகள் இதுவரை பொதுவெளியில் அறிவிக்கவில்லை. 
இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட இந்தத் தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றிபெறும்.
2014- இல் மக்களிடையே மோடி மீதான எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது. ஆனால், இந்த முறை மோடி மீது  மக்களிடையே பெரிய நம்பிக்கை உள்ளது. இதனால், பாஜகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கூடக் கிடைக்கலாம்.  
எந்தவொரு இந்தியப் பிரதமரும், பிரதமர் மோடியைப் போல எதிர்க்கட்சிகளால் தூற்றப்படவில்லை. பிரதமர் மோடியை கீழானவர் எனப் பொருள்படும் வகையில் கூறியதில் தவறில்லை என காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் ஐயர் கூறியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன?
உத்தரப் பிரதேசத்தில், சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியால் மாற்றம் ஏற்படலாம் என தொடக்கத்தில் நினைத்தோம். ஆனால், அக்கூட்டணி தோல்வியடைந்துவிட்டது.  அந்த மாநிலத்தில் 74 இடங்களில் பாஜக வெற்றிபெறும்.  ஹிந்து பயங்கரவாதம், காவி பயங்கரவாதம் ஆகிய புதுப் புது வார்த்தைகளைக் கண்டுபிடித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்துகிறது. பயங்கரவாதம் தொடர்பாக கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
விலைவாசியை தேர்தல் பிரச்னையாக எதிர்க்கட்சிகளால் எழுப்ப முடியாமல் உள்ளது. இதற்கு பாஜக அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தியதே முக்கியக் காரணம். பிரதமர் மோடி நாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.  எதிர்க்கட்சிகள்தான் சிறுபான்மையினரிடையே தேவையில்லாத பயத்தை உருவாக்கி, நாட்டைத் துண்டாக்கும் வகையில் நடந்து கொள்கின்றன.  
பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்கவில்லையா எனக் கேட்கிறீர்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக - கலாசார அமைப்பு. 
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதில்லை. உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிகளவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் கொல்லப்படுவது 60 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. அதேபோல, காஷ்மீரில் பயங்கரவாதம் பெருமளவு ஒடுக்கப்பட்டுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT