இந்தியா

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு

DIN

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை தில்லி சிறப்பு நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.  

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.  இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் முடக்கினர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதேபோல், அவர்களுக்கு எதிராக சிபிஐயும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, இருவரையும் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை மே 30-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, இருவரையும் கைது செய்வதற்கான தடையை மே ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT