இந்தியா

தமிழக போக்குவரத்துத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு: ஜெர்மனி பிரதமர் அறிவிப்பு

DIN

தமிழக போக்குவரத்துத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான 63-ஆவது வருடாந்திரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏஞ்சலா மெர்கல் உரையாற்றியதாவது:

தமிழக போக்குவரத்துத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 1,580 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தில்லியில் உள்ள காற்று மாசு நாம் அனைவரும் அறிந்தது தான். இதை சீரமைக்க வேண்டுமென்றால் டீசல் வகைப் பேருந்துகள் அனைத்தும் இ-பேருந்துகளாக மாற்ற வேண்டியது குறித்து தற்போது விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே தான் பசுமை போக்குவரத்து முறையை ஏற்படுத்த இந்தியா, ஜெர்மனி கூட்டு முயற்சியின் அடிப்படையில் ஒரு பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,080 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கல், இரு நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். 

அப்போது இருவரின் முன்னிலையில் வேளாண்மை, கடல்சாா் பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆயுா்வேதம், யோகாசனம், தியானம், தொழிற்பயிற்சி, நோய்த்தடுப்பு, தேசிய அருங்காட்சியக ஒத்துழைப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வு, நவீன தொழில்நுட்ப ஆய்வில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையே 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT