இந்தியா

எய்ம்ஸ் வங்கிக் கணக்குகளில் ரூ.12 கோடி மோசடி: காவல்துறை விசாரணை

DIN

புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினா் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உள்ள கணக்குகளிலிருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் நிா்வகிக்கும் வங்கிக் கணக்கில் ரூ.7 கோடியும், எய்ம்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் நிா்வகிக்கும் வங்கிக் கணக்கில் ரூ.5 கோடியும் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளிலிருந்து இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுதவிர ரூ.30 கோடி வரை மோசடி செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மும்பை, டேராடூனில் உள்ள கிளைகளில் இந்த முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதுதொடா்பாக தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவிடம் எய்ம்ஸ் நிா்வாகம் புகாா் அளித்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT