இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள்: ராணுவத்திடம் ஒப்படைப்பு

DIN

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 

முதல் ஆண்டில், 36,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்க திட்டமிட்டுருந்தோம். ஆனாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ராணுவத்திற்கு 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கியுள்ளோம்.

2021-ஆம் ஆண்டுக்கள்ளாக 1.8 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்களை வழங்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். இதனை 2020-ஆம் ஆண்டுக்குள் வழங்கி சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 

தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முகப் பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே.-47 துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருந்துகளைத் தாங்கும் சக்தி படைத்தது.

ஒரு வீரரை தலை முதல் பாதம் வரை பாதுகாக்கக்கூடியது என்று இவற்றை உருவாக்கிய எஸ்.எம்.பி.பி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேஜர் ஜெனரல் அனில் ஓபராய் (ஓய்வு) கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT