இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு

DIN

உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை (செப்.23) பதவியேற்றனர். புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார். 

ஹிமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன் 

பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட் 

கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் 

ஆகிய நால்வருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 31-ல் இருந்து 34-ஆக உயர்ந்தது.

ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், ராமசுப்பிரமணியன் பதவியேற்பதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT