இந்தியா

கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

DIN



கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. பள்ளமான பகுதிக்குள் சரிந்ததால் விமான இரண்டாக உடைந்தது.

இதில், தலைமை விமானி உள்பட 17 போ் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விமான விபத்து குறித்து விசாரணை நடத்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன் டி.ஜி.சி.ஏ குழு ஒன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்துள்ளது. இதையடுத்து கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோழிக்கோடு விமான நிலையம் வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT