இந்தியா

2025-க்குள் மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

DIN

‘உடான்’ விமானச் சேவை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள இரண்டாம் நிலை நகரங்களை விமானப் போக்குவரத்து சேவை மூலம் இணைப்பதற்காக, உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-இல் அறிமுகம் செய்தது. குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் இந்தத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.17 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT