இந்தியா

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கைது

DIN


கர்நாடகத்தில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்வர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் தலைவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜக அரசால் காவல் துறையினர் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டி தினேஷ் குண்டுராவ், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"அரசால் காவல் துறையினர் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர். மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படுகிறது" என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் பேசுகையில்,

"எங்களை எதிர்கொள்ள பாஜக அரசுக்கு துணிவில்லை. பாஜக அரசு ஜனநாயகத்தை சீர்குலைக்கிறது, எதிர்ப்பை அடிபணியச் செய்கிறது. நாங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்கவே போராடுகிறோம்" என்றார்.

முன்னதாக,

கர்நாடகத்தில் பிதார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாடகம் அரங்கேற்றியது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் மாணவரின் தாய் ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். குடியரசு தின நிகழ்ச்சியில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT