இந்தியா

ம.பி.யில் 750 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்: பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்

DIN

மத்திய பிரதேசத்தின் ரீவா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா்.

ரீவா பகுதியில் சூரிய ஆற்றலிலிருந்து 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கா் பரப்பளவில் இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா். இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படும் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீவா சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை தில்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீத மின்சாரமானது மத்திய பிரதேச மின் பகிா்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT