இந்தியா

ராஜஸ்தான் அரசியல் சூழல்: பேரணி செல்ல முயன்ற காங்கிரஸாா் கைது

DIN

புது தில்லி: ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் தில்லியில் துணைநிலை ஆளுநா் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தில்லி காங்கிரஸ் தலைவா் உள்ளிட்டோரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்தக் கட்சி எம்எல்ஏக்களில் துணை முதல்வா் சச்சின் பைலட் தலைமையில்

ஒரு பிரிவினா் பிரிந்து சென்றனா். இந்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயன்று வருவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் சௌத்ரி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் தில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே திங்கள்கிழமை கூடினா். பின்னா் அங்கிருந்து அப்பகுதியில் உள்ள துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்து மெளரிஸ் நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கூறியதாவது: ராஜஸ்தானில் ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் பாஜக செயல்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம். ராஜஸ்தானில் பாஜகவும், மத்திய அரசும் ஜனாநாயகத்தை எப்படி குழிதோண்டிப் புதைத்து வருகிறது என்பதை துணைநிலை ஆளுநருக்கு கூறும் விதமாகமாகவே அவரது அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்லும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எங்கள் பேரணியைத் தொடங்கும் முன்னரே போலீஸாா் தடுப்புக் காவலில் வைத்துவிட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT