இந்தியா

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் திரள வேண்டாம்: ராமஜென்மபூமி அறக்கட்டளை வேண்டுகோள்

DIN

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் திரள வேண்டாம் என ராமஜென்மபூமி அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். 

இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் அதிகம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளை, 'தற்போது கரோனா பரவல் காரணமாக விழாவில் மக்கள் திரள வேண்டாம். அடிக்கல் நாட்டு விழா முழுவதும் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் நேரலை செய்யப்படும். எனவே, மக்கள் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் காணலாம். 

மேலும், நட்சத்திரத்தின்படி, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 3 அல்லது 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி எனத் திட்டமிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT