இந்தியா

பருவ மழைக்காலத்தின் பிற்பகுதியில் இயல்பான மழைப்பொழிவு: இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN

தென்மேற்கு பருவ மழைக்காலத்தின் இரண்டாவது பகுதியில் பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிகிழமை தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்திருப்பதாவது:

2020-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது பாதியாக கருதப்படும் ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய 2 மாதங்களில், ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பொழிய வாய்ப்புள்ளது. இது நீண்ட கால சராசரியில் 97 சதவீதமாகும். இந்தப் பருவத்தின் இரண்டாம் பாதியில் நாடு முழுவதும் மழைப்பொழிவு 104 சதவீதமாக இருக்கும்.

‘1961 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலும் நாடு முழுவதும் நீண்டகால சராசரி (எல்பிஏ) மழைப்பொழிவு 88 சென்டிமீட்டராக இருந்தது. இது தற்போது 96 முதல் 104 சதவீதமாக இருக்கும். அதேவேளையில் நாட்டின் அதிகாரப்பூா்வ மழைக்காலம் ஜூன் 1 முதல் செப்டம்பா் 30 வரை ஆகும் என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT