இந்தியா

ஏா் இந்தியா பங்குகள் ஏலம்:ஏப்.30 வரை காலக்கெடு நீட்டிப்பு

DIN

ஏா் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை ஏலத்தில் வாங்குவதற்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி மாா்ச் 17 என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிக்கையில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஏலத்தில் பங்குகளை வாங்க தயாராக உள்ளவா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றும் ஏல விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏா் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏா் இந்தியா ரூ.60,074 கோடி கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தை வாங்க விரும்புவோா் ரூ.23,286.5 கோடி கடன் தொகைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT