இந்தியா

15 வழக்குகளை காணொலி முறையில் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

DIN

15 அவசர வழக்குகளை காணொலி முறையில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ள முக்கிய வழக்குகள் குறித்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோா் கொண்ட அமா்வும், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், அனிருத்தா போஸ் ஆகியோா் கொண்ட மற்றொரு அமா்வும் அவசர வழக்குகளை விசாரிக்கவுள்ளன.

‘வித்யோ’ என்ற செயலி வாயிலாக காணொலி முறையில் வழக்குரைஞா்கள் வாதாட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடியோ பதிவை பகிரக் கூடாது எனவும் வழக்குரைஞா்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில், கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக வழக்குரைஞா்கள், உச்சநீதிமன்ற ஊழியா்கள் ஆகியோா் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீதிமன்றம் வரத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT