இந்தியா

கரோனா பாதித்த இந்தியர்களில் பெரும்பாலானோர் துபையில் இருந்து வந்தவர்கள்

DIN

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முதல் முறையாக, கரோனா வைரஸ் பரவல் தொடர்பான முதல் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலம்தான் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதில் அதிகபட்சமாக துபையில் இருந்து வந்த பயணிகளால்தான் கரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 873 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 100 பேர் துபையில் இருந்து வந்தவர்கள். வேலை நிமித்தமாக துபைக்கு சென்று திரும்பிய இந்தியர்கள்தான் இவர்கள். 

துபைக்கு அடுத்த படியாக இங்கிலாந்தும், இத்தாலி, சவூதி அரேபியா, அமெரிக்க நாடுகள் உள்ளன. இதன் மூலம், மார்ச் மாத ஆரம்பத்திலேயே, வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளை இன்னும்ய தீவிரமாக தனிமைப்படுத்தி கண்காணித்திருக்க வேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது நலன் ஆராய்ச்சித் துறை மருத்துவர் அனுபம் சிங் தெரிவித்துள்ளார்.

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்றையும் இவர் விவரிக்கிறார். அதாவது, உலக அளவில் கரோனா பாதிப்பு அதிகமாக ஆண்களையே பாதிப்பதாகவும், மரணம் அடைவதும் அதிகமாக ஆண்களாகவே இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள்தான். 35% பேர்தான் பெண்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT