இந்தியா

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் இணையதளம் தொடக்கம்

DIN

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ் (www.Champions.gov.in) இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும். 

நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, தேசிய மற்றும் உலகளாவிய சாம்பியன்ஸ் என்ற நிலையை நோக்கிய நகர்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்துக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப்படுகிறது.

சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT