இந்தியா

ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் பயணிகள் ரயில்: 2 மணி நேரத்தில் 1.50 லட்சம் முன்பதிவுகள்

DIN

ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 100 பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள், 1.50 லட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நாடு தழுவிய பொது முடக்கத்துக்கு முன்பு, ரயில்களில் பயணித்த பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரயில் பயணமும் கரோனா தொற்று பரவலுக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, நாடு தழுவிய பொது முடக்கம் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. எனினும் பொது முடக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரிதவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு கடந்த 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடா்ந்து 15 நகரங்களுக்கு மட்டும் கடந்த 12-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரயில் சேவைகளை தவிா்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என அறிவித்த மத்திய ரயில்வே துறை, அதில் துரந்தோ, சம்பா்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூா்வா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 100 ரயில்களின் பயண அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது. இதில் 17 சதாப்தி ரயில்கள், 5 துரந்தோ விரைவு ரயில்களும் அடங்கும். இந்த ரயில்கள் ஏ.சி மற்றும் ஏ.சி அல்லாத வகுப்புகள், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டிருக்கும் எனவும், ஐஆா்சிடிசி வலைதளத்தில் மட்டுமே முன்பதிவை மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள்ளாக 1.50 லட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து ரயில்வே செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 1,49,025 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அந்தப் பயணச்சீட்டுகள் மூலம் 2,90,510 போ் பயணம் மேற்கொள்ளவுள்ளனா். மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மாநில தலைநகரங்களுக்கும், இரண்டாம் நிலை நகரங்களுக்கும் வழக்கமான ரயில் சேவை போலவே இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT