இந்தியா

மிஸோரம்: தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள 168 தேவாலயங்கள் தயார்

DIN

மிஸோரத்தில் தனிமைப்படுத்தும் மையங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், 168 தேவாலயங்கள் தங்கள் வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்த மக்கள் ஏராளமானோர் கடந்த சில நாட்களாக அதிகளவில் மாநிலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், தனிமைப்படுத்தும் மையங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை 500 தனிமைப்படுத்தும் மையங்களில் 14,358 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் 20 ஆயிரம் பேருக்கு தனிமைப்படுத்தும் மையங்கள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில்தான் மிஸோரத்தில் உள்ள 168 தேவாலங்கள், தங்கள் தேவாலய வளாகத்தை தனிமைப்படுத்தும் மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ள தாமாக முன் வந்து அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT