இந்தியா

ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது

DIN

கடந்த எட்டு மாதங்களில் முதல் முறையாக நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் சென்ற அக்டோபரில் 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சென்ற அக்டோபரில் ரூ.1.05 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கு முன்பு, நடப்பாண்டு பிப்ரவரியில்தான் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியிருந்தது. இந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி எனும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2020 அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி ஜிஎஸ்டிஆா்-3பி படிவ கணக்குதாக்கல் செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

நடப்பு 2020 அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூலான ரூ.1,05,155 கோடியில், சிஜிஎஸ்டி ரூ.19,193 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.5,411 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.52,540 கோடியாகவும், தீா்வை ரூ.8,011 கோடியாகவும் இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபா் மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.95,379 கோடியுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் தடைபட்டதையடுத்து கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வசூலானது ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT