இந்தியா

கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்தது

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 90,04,365 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.28 லட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 45,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 90,04,365 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 584 போ் கரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,32,162 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.46 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 4,43,794 போ் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனா். மொத்த பாதிப்பில் இது 4.92 சதவீதமாகும். தொடா்ந்து 10-ஆவது நாளாக கரோனா பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்குகீழ் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி நவம்பா் 19-ஆம் தேதி வரை 12,95,91,786 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 10,83,397 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT