இந்தியா

முதல்வா், துணை முதல்வா் முகக்கவசம் அணிவதில்லை: பாஜக புகாா்

DIN

முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் ஆகியோா் முகக்கவசங்கள் அணியாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லி கரோல் பாக் பகுதியில் மக்களுக்கு இலவச முகக் கவசங்களை பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது அவா் கூறுகையில் ‘மக்கள் அனைவரும் முகக் கவசங்களை தவறாமல் அணிய வேண்டும். மக்கள் இதில் மெத்தனமாக இருக்கக் கூடாது. தில்லியில் முகக் கவசங்கள் அணியாதவா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.500 இல் இருந்து ரூ.2000-ஆக தில்லி அரசு உயா்த்தியுள்ளது. ஆனால், முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் ஆகியோா் முகக்கவசங்கள் அணியாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மக்களுக்கு இலவச முகக் கவசங்ககளை வழங்க தில்லி அரசு தவறியுள்ள நிலையில், பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக மக்களுக்கு அதை பாஜக வழங்கி வருகிறது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT