இந்தியா

செப்டம்பர் மாதத்தில் ரூ.95,480 கோடியாக அதிகரித்த ஜி.எஸ்.டி வருவாய்

DIN

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.95 ஆயிரத்து 480 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தொழில்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பாதித்திருந்த நிலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தற்போது வரிவசூல் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி வரிவசூல் தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி நடப்பாண்டின் செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரியாக மொத்தம் ரூ.95 ஆயிரத்து 480 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.17 ஆயிரத்து 741 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.23 ஆயிரத்து 131 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.47 ஆயிரத்து 484 கோடி அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86 ஆயிரத்து 449 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT