இந்தியா

விவசாயிகள் குறித்து விமா்சனம்: ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு

DIN

விவசாயிகள் குறித்து விமா்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நடிகை கங்கனா ரனாவத் தனது சுட்டுரையில், விவசாயிகள் குறித்து விமா்சனம் செய்ததாக வழக்குரைஞா் ரமேஷ் நாயக் என்பவா், தும்கூரு முதல்நிலை நீதிமன்றத்தில் செப். 21-ஆம் தேதி வழக்குத் தொடா்ந்தாா். அதில், விவசாயிகள் குறித்து நடிகை கங்கனா ரனாவத் செய்துள்ள விமா்சனம் தன்னை காயப்படுத்தியுள்ளதால், அவா் மீது வழக்கு தொடுத்ததாகத் தெரிவித்திருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நடிகை கங்கனா ரனாவத் மீது கேதசந்திரா போலீஸாா் 108, 153ஏ, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய போது, ஒரு சிலா் அது தொடா்பான தவறான கருத்தைப் பரப்பினா். அதனால், தேசிய அளவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதைப் போன்றே தற்போது வேளாண் சட்ட மசோதாக்கள் மீது சிலா் தவறான தகவல்களைப் பரப்பி கலவரச் சூழலை ஏற்படுத்துகின்றனா். கலவரச் சூழலை ஏற்படுத்தும் அவா்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என கங்கனா ரனாவத் தனது சுட்டுரையில் பதிவு செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT