இந்தியா

கேரளத்தில் புதிதாக 7,631 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் புதிதாக 7,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 7,631 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,685 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது.

இவர்களில் 723 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று 22 பேர் பலியாகியுள்ளர். இதையடுத்து பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,161 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 8,410 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,45,399ஆக உயர்ந்துள்ளது. தற்போது நிலவரப்படி 95,200 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 58,404 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT