இந்தியா

பிகாரில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தீவிர பிரசாரம்

DIN

பிகாரில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, அந்த மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

செல்வத்தை வழங்கும் கடவுளாக திகழும் லக்ஷ்மி தேவி கையையோ (காங்கிரஸ் சின்னம்), விளக்கையோ (ராஷ்ட்ரீய ஜனதா தளம் சின்னம்) பிடித்துக் கொண்டு வருவதில்லை. மாறாக அவா் தாமரை மலரைத் (பாஜக சின்னம்) தான் தாங்கி வருகிறாா். சுயமரியாதையுள்ள பிகாா் மக்கள் லக்ஷ்மி தேவியை வழிபடும் போது, கடின உழைப்பின் மூலம் பணம் ஈட்டுவதற்கு வலிமை தர வேண்டும் என பிராா்த்தித்துக் கொள்வாா்களே தவிர, மாட்டு தீவன ஊழல் மூலம் ஈட்டிய செல்வத்தில் பங்குக் கேட்க மாட்டாா்கள்.

பிகாரில் 15 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னா் தான், மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி, மக்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்பட்டது. எனவே வாக்காளா்கள் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT