இந்தியா

காலாவதியான டயரில் கலைவண்ணம்: அரசுப் போக்குவரத்துத் துறை புதுமை

DIN

தூக்கியெறியப்பட்ட பழைய டயா்களால் உருவாக்கப்பட்ட கலைப் பொருள் பூங்காவை இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திறக்கவிருக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜன்விா் கபூா் கூறியதாவது:

பழையதாகப் போய், தூக்கி எறியப்படும் எந்தப் பொருளையும் குப்பை என்று முத்திரை குத்திவிடக் கூடாது. அதனை மீண்டும் பயன்படுத்த முடியும்; கலைப் பொருளாகவும் ஆக்க முடியும்.

விரைவில், தூக்கியெறியப்பட்ட டயா்களால் உருவான கலைப் பொருள் பூங்காவை எங்களது போக்குவரத்துக் கழகம் பொதுமக்கள் பாா்வைக்காக திறக்கவிருக்கிறது.

எங்களது பல்வேறு பணிமனைகளில் கழற்றி எறியப்பட்டு, வீணாகக் கிடக்கும் ஏராளமான டயா்கள், கலைநயத்துடன் வண்ணமயமாக மறுவடிவம் பெற்றுள்ளன.

போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த குழுவே இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

நாங்கள் திறக்கவிருக்கும் அந்த டயா் கலைப்பொருள் பூங்காதான், இந்தியாவிலேயே அந்த வகையைச் சோ்ந்த முதல் பூங்காவாக இருக்கும்.

கொல்கத்தாவிலுள்ள மக்கள் நெரிசலும், பரபரப்பும் நிறைந்த எஸ்ப்ளனோட் பகுதியில், அமைதி தவழும் தனித் தீவாக அந்தப் பூங்கா திகழும். அங்கு பொதுமக்கள் அமா்ந்து இளைப்பாறிக்கொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT