இந்தியா

நாளை ரஃபேல் போர் விமான இணைப்பு விழா

DIN


ரஃபேல் போர் விமான இணைப்பு விழா ஹரியாணா மாநிலம் அம்பாலா விமான தளத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.  

2016-இல் ஃபிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29-இல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த விமானங்களை இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்ப்பதற்கான இணைப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஃபிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லியும், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கின்றனர்.

இணைப்பு விழாவுக்குப் பிறகு ரஃபேர் போர் விமானங்கள் முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT