இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் குறித்து விபரங்கள் இல்லை: நிதியுதவிக்கு கைவிரித்த மத்திய அரசு!

DIN

புது தில்லி: கரோனா ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு நடந்தே திரும்பிய சமயத்தில் மரணமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் குறித்து விபரங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது,

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று கரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்,பிக்கள், கரோனா ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு நடந்தே திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்த விபரங்கள், மாநில வாரியான பலியானவர்களின் எண்ணிக்கைகள் மற்றும் இறந்தவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தனர்.  

அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதிலில், ‘அப்படி எந்த ஒரு தகவலும் மத்திய அரசால் பேணப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவிகள் குறித்த கேள்விக்கு, ‘இறந்தவர்கள் குறித்த தகவல்கள் இல்லாததால் நிதியுதவி குறித்த கேள்வியே எழவில்லை’ என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார். அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்வே துறை ஏற்பாடு செய்த சிறப்பு ரயில்கள் குறித்தும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.  

மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற இந்த பதிலை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT