இந்தியா

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

DIN


புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவர்களுடன் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தியது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகள் தலைவர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, தாவர்சந்த் கெலாட், பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா, திரிணமூல் காங்கிரஸிலிருந்து டெரிக் ஓ பிரையன், டிஆர்ஸ் கட்சியிலிருந்து கே. கேசவ ராவ் மற்றும் திமுகவிலிருந்து திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜிஎஸ்டி விவகாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

இவை பற்றி எதிர்க்கட்சிகள் மத்தியில் அரசுத் தரப்பில் புரிதலை ஏற்படுத்த முயற்சிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் திருப்தியடையவில்லை எனத் தெரிகிறது. இருந்தபோதிலும், கூட்டம் சுமுகமாக நிறைவடைந்ததாகவும் மீண்டும் அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் என்றும் பாஜக தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT