இந்தியா

கரோனா பாதிப்பு 54 லட்சத்தைக் கடந்தது

DIN

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,00,619 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 92,605 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 94,612 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். தொடா்ந்து இரண்டாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்படுபவா்களைவிட கரோனாவில் இருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 43,03,043 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் கரோனாவில் இருந்து குணமடைந்தோா் சதவீதம் 79.68 ஆக உள்ளது. கரோனாவுக்கு மேலும் 1,133 போ் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 86,752 ஆக அதிகரித்துள்ளது. எனினும், உயிரிழப்பு விகிதம் 1.61 சதவீதமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 10,10,824 ஆக உள்ளது. மொத்த கரோனா பாதிப்பில் இது 18.72 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி இதுவரை 6,36,61,060 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 12,06,806 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32,216 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT