இந்தியா

நாட்டில் ஒரே நாளில் 86,961 பேருக்கு கரோனா; 1,130 பேர் பலி

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54.87 லட்சமாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 86,961 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:

இதுநாள்வரை  நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54,87,581 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 43,96,399 போ் இதுவரை மீண்டுள்ளனா். திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,130 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 87,882 ஆக அதிகரித்துள்ளது. ற்போது 10,03,299 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஒட்டுமொத்தமாக 6,43,92,594 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,31,534 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

SCROLL FOR NEXT