இந்தியா

அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவு

DIN

அசாம் மாநிலத்தில் இரண்டு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை அதிதீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் குவஹாத்திக்கு மேற்கே 44 கி.மீ தூரத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 1.28 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பார்பேட்டா மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 71 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் பாதுகாப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT