இந்தியா

கரோனா பாதிப்பால் மராத்தி நடிகை பலி

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மராத்தி திரைப்பட நடிகையும் நாடகக் கலைஞருமான அஷலதா வப்கோங்கர் செவ்வாய்க்கிழமை மறைந்தார்.

நாட்டில் கரோனா நோய் தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் பிரபல திரைப்பட நடிகை அஷலதா வப்கோங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த அஷலதா வப்கோங்கருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.

அஷலதா வப்கோங்கர் 100 க்கும் மேற்பட்ட நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் 'நமக் ஹலால்', 'சஞ்சீர்' உள்ளிட்டப் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT