இந்தியா

மேகாலயாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி; 5 பேர் மாயம்

DIN

மேகாலயாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது. ஏராளமான வீடுகள் நிலச்சரிவில் புதைந்ததால் வீடுகளை இழந்த மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் மவ்னி பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ரைஸியா அகமது என்ற 30 வயது பெண் நிலச்சரிவில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டார். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 5 பேரை பேரிடர் மீட்புப் படையினர் உதவியுடன் உள்ளூர் மக்கள் தேடி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மேகாலயா கிரிக்கெட் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கிதியோன், 2011-12 ஆகிய காலகட்டங்களில் மாநில பிரதிநிதியாக தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்றவர் ரஸியா. மேலும் கடந்த ஆண்டு பிசிசிஐ-யால் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் மேகாலயா சார்பாக விளையாடினார். அவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை அளிக்கிறது. ரஸியாவின் மறைவுக்கு அவரது அணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் ஏற்பட்ட சேதங்களை அகற்றும் பணியில் காவல்துறையினருடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT