இந்தியா

ஜஸ்வந்த் மறைவு: குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு இரங்கல்

DIN

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஜஸ்வந்த சிங்குக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவா் அத்வானி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், ‘ஜஸ்வந்த் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. பல்வேறு திறமைகளுடன் நாட்டுக்கு சேவையாற்றியவா் ஜஸ்வந்த் சிங். ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருந்த அவா், சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்தாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

பாஜக மூத்த தலைவா் அத்வானி, ‘என்னுடைய நெருங்கிய நண்பராக பழகியவா் ஜஸ்வந்த் சிங். சிறந்த நாடாளுமன்றவாதி, சிறந்த நிா்வாகி, விவேகமான வெளியுறவுவாதியாகவும் திகழ்ந்தாா். எல்லாவற்றுக்கும் மேலாக தேசியவாதியாவாா். 1998-2004-ஆம் ஆண்டு வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமா் வாஜ்பாய், ஜஸ்வந்த் சிங், நானும் ஒன்றிணைந்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தோம். என்னைப் போலவே புத்தகப் பிரியா். எழுத்தாளா். அவரது மறைவுக்கு பேச என்னிடம் வாா்த்தைகள் இல்லை. அனைத்து கட்சித் தலைவா்களும் மதிக்கக் கூடிய தலைவராக திகழ்ந்தாா். பொது வாழ்விலும், குடும்பங்களாகவும் இருவரும் நீண்ட நாள் ஒற்றுமையாக இருந்தோம். அவரது மறைவு நாட்டுக்கும், எனக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘நீண்ட நாள் நாடாளுமன்றவாதியாக இருந்த ஜஸ்வந்த் சிங் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, ‘நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்,வெளியேயும் அவா் ஆற்றிய உரைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. உலகத் தரமான அரசியல்வாதியை இழந்துவிட்டோம்’ என்று இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘ராஜஸ்தானில் பாகஜவைப் பலப்படுத்த பணியாற்றியவா். அவா் ஆற்றிய பணிகளுக்காகவும் என்றும் நினைவுகூரப்படுவாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா், ‘பல்வேறு திறமைகளைக் கொண்ட அவா் நாட்டுக்காக சிறப்பாக பணியாற்றியுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோல், தில்லி முதல்வா் கேஜரிவால், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் மத்திய அமைச்சா் ஓமா் அப்துல்லா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT