இந்தியா

தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள்

DIN

தேசிய புலனாய்வு முகமைக்கு மேலும் 3 புதிய கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. 

நாடு முழுவதும் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயங்கரவாத குற்றச்சம்பவங்கள் தொடர்பான முக்கிய விசாரணைகள் தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு முகமை மத்திய அரசுக்கு உதவி வருகிறது.

இந்நிலையில் மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய தேசிய புலனாய்வு முகமைக் கிளைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அனுமதியளித்தது. அதன்படி இம்பால், சென்னை மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள இதன் அலுவலகங்கள் 12ஆக உயர உள்ளது.

தற்போது, கெளஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் என்ஐஏ கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT