புரியில் விமான நிலையம் தேவை: பிரதமருக்கு பட்நாயக் கோரிக்கை
ஒடிசா மாநிலம் புரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் நவீன் பட்நாயக், புரிக்கு முன்னுரிமையளித்து விமான நிலையம் கொண்டுவரும் பணிகளுக்கு விமான போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
புரியில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்ரீ ஜெகன்னாத் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரையும் பரிந்துரை செய்துள்ளார்.
Advertisement
Advertisement
விமான நிலையம் அமைப்பதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் புரி ஜெகன்னாதரை வந்து தரிசனம் செய்ய உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் அமையவுள்ள இடத்தையும் ஏற்கனவே முடிவு செய்துள்ளதால், விமான நிலையம் அமைக்கும் மத்திய அரசின் பணிக்கு ஏதுவான உதவிகளை மாநில அரசு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.