நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு
குடியிருப்பு கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடியிருப்பு கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பை ஜுவூ பகுதியில் ஆறு மாடிக் கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் முறையான அனுமதியின்றி மாற்றங்கள் செய்ததாலும், உணவகமாக மாற்றியதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டது. எனினும் அதற்கு 30 நாள்களுக்குள் பதிலளிக்க சோனு சூட் தவறியதால், குடியிருப்பு பகுதியில் நேரடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடியிருப்பு பகுதியை முறைகேடாக உணவகமாக மாற்றியுள்ளதாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் ஜுவூ காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைய்த் தொடர்ந்து நடிகர் சோனு சூட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.