முகப்பு
இந்தியா

நேதாஜியின் மருமகள் மாரடைப்பால் உயிரிழப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

Updated On : 8 ஜனவரி 2021, 6:32 pm IST
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் (கோப்புப்படம்)
பகிர்:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் மாரடைப்பால் உயிரிழந்தார். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகள் சித்ரா கோஷ் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை தந்தமைக்காக பலராலும் அறியப்பட்டவர். 

90 வயதான அவர் நேற்று (ஜன. 7) காலை 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சித்ரா கோஷின் மருமகனும் பாஜக தலைவருமான சந்திர குமார் போஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

மக்களுக்கு கற்பிக்கவும், இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் என்று தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சித்ரா கோஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''கல்வி மற்றும் சமூக சேவையில் முன்னோடியான பங்களிப்பை அளித்தவர் பேராசிரியர் சித்ரா கோஷ். அவருடனான எனது கலந்துரையாடலை நினைவுகூர்கிறேன். 

நேதாஜியின் கோப்புகளை வகைப்படுத்துதல் உள்பட பல துறைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளோம். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடுபத்திற்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments