முகப்பு
இந்தியா

ம.பி.: பண்ணையில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 1:53 pm IST
ம.பி.: பண்ணையில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையில் உள்ள மற்ற கோழிகளை பரிசோதிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மேலும் கோழிப் பண்ணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மற்ற கோழிப் பண்ணைகளை அடுத்த 7 நாள்களுக்கு மூட வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நீமுச் மாவட்டத்தில் அனைத்து கோழிப் பண்ணை, இறைச்சி மற்றும் முட்டை கடைகளை  மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments