இந்த வாரம் (ஜூலை 10) வெளியாகும் திரைப்படங்கள்!
இந்த வாரம் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்து...
ஜூலை 10 ஆம் தேதி அதர்வாவின் இதயம் முரளி உள்பட சில திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவிற்கு புதிது புதிதாகத் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் 124 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில், 10 சதவீத திரைப்படங்கள் மற்றுமே வணிக ரீதியான வெற்றியையும் பெற்றுள்ளன.
கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மேலும், வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வெளியீடாக அதர்வாவின் இதயம் முரளி, நடிகர் பவிஷ் நடிக்கும் லவ் ஓ லவ், லட்சுமி காந்தன் கொலை வழக்கு, அரூபி, முதற்கனல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதில், அதர்வா நடித்த இதயம் முரளி அதிக திரைகளில் வெளியாகவுள்ளது.
Several films, including Atharvaa's Idhayam Murali, are releasing on July 10.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.