முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்கள்: ஜன.15-இல் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 5:41 pm IST
வேளாண் சட்டங்கள்: ஜன.15-இல் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் போராட்டம்
பகிர்:

விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 45 நாள்களாக தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிய நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற 8 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. 

Advertisement

Advertisement

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறித்தும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.

ஜனவரி 15ஆம் தேதியன்று நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments