முகப்பு
இந்தியா

கரோனா பேரிடரில் உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களை பாராட்டிய மோடி

கரோனா பேரிடரின் போது தங்களால் இயன்ற உதவிகளை அளித்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Updated On : 9 ஜனவரி 2021, 6:16 pm IST
கரோனா பேரிடரில் உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களை பாராட்டிய மோடி
பகிர்:


புது தில்லி: கரோனா பேரிடரின் போது தங்களால் இயன்ற உதவிகளை அளித்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது. உலகின் பல்வேறு மூலைகளில் வாழ்ந்த இந்தியர்கள், தங்கள் தாய்நாட்டுக்கு அளித்த பங்களிப்பு பெருமையுடன் நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்கலாமே.. இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை காணவில்லை

Advertisement

Advertisement

வெளிநாடுகளில் வாழ்ந்த பல இந்தியர்கள் கரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை இழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது பலத்தை அங்கே நிரூபித்து வருகிறார்கள் என்றும் மோடி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments