குஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கி காலமானார்
காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார். இவர் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
புது தில்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார். இவர் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
94 வயதான மாதவ்சிங் சோலங்கி காந்திநகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார்.
மாதவ்சிங் சோலங்கி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், குஜராத் அரசியலில் பல ஆண்டு காலமாக மிக முக்கியப் பங்காற்றியவர் என்றும், இந்த சமுதாயத்துக்கு அவர் மேற்கொண்ட சேவைகள் மூலம் அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாதவ்சிங் சோலங்கி மறைவுக்கு சுட்டுரையில் இரங்கல் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு வலுவூட்டியதற்காகவும், சமூக நீதியை நிலைநாட்டியதற்காகவும் அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.