கரோனா: புதிதாக 18,222 பேருக்கு பாதிப்பு
நாடு முழுவதும் மேலும் 18,222 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 18,222 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,222 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,04,31,639-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,253 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,56,651-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.41 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 228 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,798-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,24,190 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.15 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 228 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 73 போ் உயிரிழந்தனா். மேற்கு வங்கத்தில் 21 பேரும், உத்தர பிரதேசத்தில் 17 பேரும், தில்லியில் 10 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 8-ஆம் தேதி வரை 18.02 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 9,16,951 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உருமாறிய கரோனா: பாதிப்பு 90-ஆக அதிகரிப்பு
பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கரோனா தீநுண்மியால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை 82 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், சனிக்கிழமை 90-ஆக அதிகரித்தது.
உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தனித்தனி அறைகளில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்தியா மட்டுமன்றி, டென்மாா்க், நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சா்லாந்து, ஜொ்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூா் ஆகிய நாடுகளிலும் உருமாறி கரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.