ஏழை மக்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி
நிதி ஆதாரம் இல்லாத ஏழை மக்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா தெரிவித்துள்ளார்.
நிதி ஆதாரம் இல்லாத ஏழை மக்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிகளை முதலில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா இதுகுறித்து, 'கரோனா பொதுமுடக்க காலத்தில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் நிதி நெருக்கடியால் அவதிப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில், நிதி ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு முதலில் இலவசமாக தடுப்பூசி போடவேண்டும் என கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் எவ்வித அச்சமின்றி வாழ ஏழைகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.