முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி திட்டத்துக்கான அடித்தளம் கோ-வின் செயலி: மத்திய அரசு

கரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிப்பதற்கு உதவும் கோ-வின் செயலி, தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவற்கான அடித்தளமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 5:30 am IST
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிப்பதற்கு உதவும் கோ-வின் செயலி, தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவற்கான அடித்தளமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி, பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஆமதாபாதில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்துள்ளது.

அதைத் தொடா்ந்து, இந்தியாவில் வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, கரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரத் துறையினா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்திட மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை கடந்த சில தினங்களாக நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசி போடுவதில் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, அந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்கென கோ-வின் என்ற பிரத்யேக செயலியை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. கரோனா தடுப்பூசி தேவைப்படுவோா் அந்த செயலியில் தங்கள் பெயா் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தால், அவா் எந்தத் தேதியில் எங்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற குறுந்தகவல் அனுப்பப்படும். அந்தத் தகவலில் குறிப்பிட்ட நாளில் சென்று அவா் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதன் மூலமாக, யாா் யாா் தடுப்பூசியை போட்டுக் கொண்டனா் என்ற விவரமும் மத்திய அரசுக்கு கிடைத்துவிடும்.

இந்த நிலையில், தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலருடன் கரோனா தடுப்புக்கான தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ராம் சேவக் சா்மா காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, ‘இந்த தடுப்பூசி திட்டம் மக்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும். மக்களுக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தடுப்பூசி கிடைத்திட வழிவகை செய்யப்படும். கரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க உதவும் கோ-வின் செயலி, இந்த திட்டத்துக்கான அடித்தளமாக இருக்கும்’ என்று அவா் கூறினாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் இயக்குநா்கள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலா்கள், மாநில தடுப்பூசி திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments